fbpx
+91 7339666455 [email protected]

மின் வழிச் சீட்டு ( GST eWay Bill ) என்பது சரக்குகளை கொண்டு செல்வதற்காக பொது வலைத்தளத்தில் உருவாக்க வேண்டிய ஒரு ஆவணமாகும்.

மின் வழிச் சீட்டின் முக்கிய கூறுகள்.

  • உருவாக்க மிகவும் எளிதானது.
  • எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம்.
  • வணிகம் தொடர்பான அறிக்கைகளை உருவாக்கிக் கொள்ளலாம்.
  • தமது வணிகம் தொடர்பாக பிறரால் உருவாக்கப்படும் மின் வழிச் சீட்டுகளை கண்காணித்துக் கொள்ளலாம்.
  • மின் வழிச் சீட்டிலிருந்து GSTR – 1 உருவாக்கலாம்
  • QR குறியீடு கொண்ட மின்வழிச் சீட்டு.
  • மின் வழிச் சீட்டு : இணையத்தின் மூலமாகவும் SMS மூலமாகவும் மாற்றியமைக்கலாம்.

| Read Also : How to Register on eWay Bill Portal

Latest Updates
  • E-way bill operations are compulsory for intra-state movement of goods for Tamil Nadu from 2nd June 2018

எதற்காக மின் வழிச் சீட்டு ?

ஜி எஸ் டி சட்டப்பிரிவு 68 மற்றும் விதி 138-ன் படி கொண்டு செல்லப்படும் சரக்குகளின் மதிப்பு ரூ.50,000/-ற்கும் அதிகமாக இருக்கும் பொழுது கட்டாயம் மின் வழிச் சீட்டு உருவாக்கப்படல் வேண்டும்.

குறிப்பு : தமிழ்நாட்டிற்குள் கொண்டு செல்லப்படும் சரக்குகளின் மதிப்பு ரூ.1,00,000/-ற்கும் அதிகமாக இருக்கும் பொழுது கட்டாயம் மின் வழிச் சீட்டு உருவாக்கப்படல் வேண்டும்.

Do you have a problem with filing GST Returns? (GSTR-1, GSTR-3B & Matching Purchase Register with GSTR-2) 

Best GST Filing Centre in Tamilnadu

Leave your GST filing worries to our Expert

Trusted by 55,000+ Happy Businesses

சரக்கு வாகனத்துடன் கொண்டு செல்லப்பட வேண்டிய ஆவணங்கள் ?

1. வரி பட்டியல் / விநியோகப் பட்டியல் அல்லது டெலிவரி சலான்.

2. மின் வழிச் சீட்டு / மின் வழிச் சீட்டு எண் கொண்டு செல்ல வேண்டும்.

I. ஒரு சரக்கு ஒப்படைப்பு > ஒரு விற்பனை பட்டியல் > ஒரு மின் வழிச் சீட்டு.
II.பல சரக்கு ஒப்படைப்புகளுக்கு ஒரே மின் வழிச் சீட்டு உருவாக்க இயலாது. பல மின் வழிச் சீட்டுகள் உருவாக்க படவேண்டும் .

Registration on the GST eway Bill Portal:-

I. GST சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற நபர்கள்

i.  GSTIN மூலமாக உள் நுழையவும்
ii. பதிவு செய்த தொலைபேசி எண்ணில் பெறப்படும் OTP எண்ணை அங்கீகரிக்கவும்.
iii.மின் வழிச் சீட்டு வலை தளத்திற்கென பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை உருவாக்கவும்.

II. GST சட்டத்தின் கீழ் பதிவு பெறாத நபர்கள்

i.  PAN எண்ணைக் கொண்டு பதிவு செய்து கொள்ளவும்.
ii.ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு பெறப்படும் OTP மூலமாக அங்கீகரிக்கவும்.
iii.வணிகத் தகவல்களை பதிவு செய்யவும்.
iv.பயனர் குறியீடு மற்றும் கடவுச் சொல் உருவாக்கிக் கொள்ளவும்.

எப்பொழுது மற்றும் எந்த பொருட்களுக்கு மின்வழிச் சீட்டு தேவை ?

சரக்கு போக்குவரத்து துவங்கும் முன் மின் வழிச் சீட்டு உருவாக்கப்படல் வேண்டும்.

அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள (154 பொருட்கள்) தவிர அனைத்து பொருட்களுக்கும் (சரக்கு மதிப்பு ரூ.50,000/- ற்கும் அதிகமாக இருக்கும் பொழுது) மின் வழிச் சீட்டு உருவாக்கப்படல் வேண்டும்.

| Read Also : List of Goods exempted from Generation of e-way Bill

மின் வழிச் சீட்டை யார் உருவாக்க வேண்டும் ?

சரக்கு வழங்குபவர்
(அல்லது)
சரக்கு பெறுபவர்
(அல்லது)
பொதி ஏற்றுநர்
TRANSPORTER

மின் வழிச் சீட்டு எப்பொழுது செல்லுபடியாகும் ?

மின் வழிச் சீட்டு படிவம் பகுதி B-ல் வாகன விபரம் குறிப்பிடப்பட்டால் மட்டுமே மின் வழிச் சீட்டு செல்லுபடியாகும்.

மின் வழிச் சீட்டு உருவாக்கிய சரக்கு வழங்குநரோ அல்லது பொதி ஏற்றுநரோ பகுதி – B -ல் வாகன விபரங்களை குறிப்பிடலாம்.

சரக்கு பரிமாற்ற வாகன விபரங்கள்

சரக்கு வழங்குனரின் இடத்திலிருந்து பொதி ஏற்றிச் செல்லுனரின் இடம் உள் மாநிலத்தில் 10 கி.மீ.ற்கு குறைவாக இருந்தாலோ

பொதி ஏற்றி செல்லுநரின் இடத்திலிருந்து சரக்கு பெறுபவரின் இடம் உள் மாநிலத்தில் 10 கி.மீ.ற்கு குறைவாக இருந்தாலோ

மின் வழிச் சீட்டில் வாகன விபரம் குறிப்பிட தேவையில்லை.

மின் வழிச் சீட்டு செல்லுபடியாகும் காலம் ?

மின் வழிச் சீட்டு படிவம் பகுதி B -ல் முதல் பதிவு மேற்கொள்ளும் பொழுது செல்லுபடி காலம் தொடங்குகிறது. மேலும் மின் வழிச் சீட்டில் மாற்றங்கள் செய்யும் பொழுது செல்லுபடி காலம் மாறாது.

ஒவ்வொரு 100 கிலோ மீட்டருக்கும்ஒரு நாள்
அடுத்த 100 கிலோ மீட்டருக்கும்கூடுதலாக ஒரு நாள்

ஒருங்கிணைந்த மின் வழிச் சீட்டு

ஒரே சரக்கு வாகனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சரக்கு ஒப்படைப்புகள், ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ.50,000/- ற்கும் மேல் கொண்டு செல்லப்படும் பொழுது பொதி ஏற்றிச் செல்லுநர் ஒருங்கிணைந்த மின் வழிச் சீட்டினை படிவம் EWB -02 ல் உருவாக்கிக் கொள்ளலாம்.

i. ஒருங்கிணைந்த மின் வழிச் சிட்டிற்கென தனியாக செல்லுபடி காலம் ஏதும் கிடையாது.

ii.அதிலுள்ள ஒவ்வொரு மின் வழிச் சீட்டிற்கு உரிய சரக்குகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வாங்குபவரிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

மொத்தமாக மின் வழிச் சீட்டு உருவாக்குதல்

அதிகமாக விற்பனை பட்டியல் வழங்கும் வணிகர்கள் மொத்தமாக மின் வழிச் சீட்டு உருவாக்குவதற்கான செயல்முறையினை பயன்படுத்தி விரைவாகவும் மொத்தமாகவும் மொத்தமாக மின் வழிச் சீட்டுகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

மின் வழிச் சீட்டில் மாற்றம் செய்தல்

ஒரு முறை உருவாக்கப்பட்ட மின் வழிச் சீட்டில் editing செய்யவோ அல்லது திருத்தும் செய்யவோ முடியாது. வாகன விபரங்களை மாற்றம் வேண்டிய சூழ்நிலையின் பொழுது update செய்து கொள்ளலாம்.

தவறான தகவல்களை கொண்டு உருவாக்கப்பட்ட மின் வழிச் சீட்டினை இரத்து செய்து விட்டு புதியதாக மின் வழிச் சீட்டினை உருவாக்கிக் கொள்ளலாம்

மின் வழிச் சீட்டு தொடர்பான அறிவிப்பு

சரக்கு வழங்குநர் மற்றும் பெருநர்களுக்கு அவர்களது GSTIN கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மின் வழிச் சீட்டு விபரங்கள் உடனுக்குடன் வலைதளத்தின் மூலமாகவும், குறுஞ்செய்திகள் மூலமாகவும் அறிவிப்பு செய்யப்படும். அதன் அடிப்படையில் விரும்பாத சரக்கு மாற்றத்தை நிராகரிக்கலாம்.

சரக்கு போக்குவரத்தின் போது வாகனத்தினை மாற்றுதல்

சரக்கு போக்குவரத்தின் போது ஒரு வாகனத்திலிருந்து மற்றொரு வாகனத்திற்கு சரக்குக்களை மாற்ற வேண்டி இருப்பின் EWB – 01 பகுதி B யில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

சரக்குகள் பெறுபவரின் இடத்திற்கு கொண்டு செல்லப்படும் வரை எதனை முறை வேண்டுமானாலும் வாகன விபரங்களை மாற்றிக் கொள்ளலாம்.

பலவகை போக்குவரத்து முறைகள்

பல வகையான போக்குவரத்து முறைகளின் மூலமாக சரக்குகள் கொண்டு செல்லப்படும் பொழுது ஒரே மின் வழிச் சீட்டில் அதன் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் ( உதாரணம் : முதலில் கப்பல், பின்னர் வான்வழி அதன் பின் தரை வழி போக்குவரத்து )

ஒவ்வொரு முறை மாற்றம் செய்யப்படும் பொழுதும் போக்குவரத்து விபரத்தினை update செய்து கொள்ளலாம்.

மின் வழிச் சீட்டினை இரத்து செய்தல்

சரக்கு கொண்டு செல்லுதல் இரத்து செய்யப்படும் பொழுதோ அல்லது ஏதேனும் தவறுகள் தென்பட்டாலோ உருவாக்கப்பட்டுள்ள மின் வழிச் சீட்டினை 24 மணி நேரத்திற்குள் இரத்து செய்ய வேண்டும்.

Easy to File your GST Returns

  • Prepare and file all your GSTR-3B & 1 in a single login
  • Single click upload from Excel, Tally, etc…